blog ல் எழுதுவது கொஞ்சம் புதிரானது.பார்க்கப்ப்டுகிறது என்பது தெரியும்.படிக்கப்படுகிறதா என்பதை பின்னூட்டங்களே சொல்லும்.
(எனவே பின்னூட்டம் இடுங்கள்)
எனக்கு தற்போது வரும் தொலைபேசி அழைப்புகளில் பாதி இந்த ஜன்ம பயணத்தைப் பற்றி மீதி முன்ஜன்ம பயணத்தைப் பற்றி.
முதலில் இந்த ஜன்ம பயணத்தைப் பற்றி :எனது தொலைபேசி எண் ஓர் கால்-டாக்சி எண்ணை போல் உள்ளதால் இந்த குழப்பம். எனவே காலையில் நான் நன்றாக தூங்கும் பொழுது ஒரு போன் “சார் நான் மைசூர் போக வேண்டும்”. (மகராசனா பொய்ட்டு வாப்பா.அதுக்கு என்னை ஏன்பா……………..……....)
இரண்டாவது, முன்ஜன்ம பயணத்தைப் பற்றி பலர் எங்காவது படித்தது, பார்த்தது அல்லது கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு அதனை க்ராஸ் செக் பண்ண (ஒரு வேளை என்னை க்ராஸ் செக் பண்ணவோ) தொடர்பு கொள்வார்கள்.
பொதுவாக மனோதத்துவம் பயின்ற, ஹிப்னாசிஸ் தெரிந்தவர்கள் ஒரு சில சிறு ப்ரச்சனைகளுக்கு ஆழ் மனதை அணுக “Age Regression” பண்ணுவதுண்டு.அதன் அடுத்த படிமமே the so called “PAST LIFE THERAPY”. அல்லது PLT ..…(இப்படியா பல்டி அடிப்பது?)
இது உண்மையா பொய்யா என்றால் எதுவும் சொல்ல முடியாது.
அப்படி என்றால் நீங்கள் அதைப் செய்கிறிர்களா?
ஆம்.
மனதில் மிக ஆழமாகப் பதிந்துள்ள ஒரு அர்த்தமற்றப் பயத்தைப் (Phobia) போக்க அந்த காலகட்டத்துக்கு போய் அதனை கண்டுபிடித்து “டிசென்சிடை” பண்ண Age Regression உதவியாக இருக்கும்.
“0” வயதுக்கு போனபின்னரும் தெரியவில்லை என்றால் மேலும் செல்வது,அப்பொழுது கிடைப்பது தான் முன்ஜென்மம் என நம்பப்படுகிறது. பழைய சினிமாப் பாடல் ஒன்று நினைவில் வருகிறது.
“தெய்வம் என்றால்
அது தெய்வம்.
வெறும் சிலை என்றால்
அது சிலை தான்” அது போல்தான்.
இது ஒருவரின் அதீத கற்பனையா அல்லது உண்மையா என்பது எனக்கு தெரியாது.ஆனால் இதன் மூலம் ஒருவருக்கு அவரது பிரச்சினை தீரும் என்றால் நல்லதுதானே?
தமிழ் சினிமாவில் ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறார்கள்
“நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் பண்ணலாம்” என்று.
*******************************************
ஆர்வமுள்ளவர்கள் மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.
1.LIFE AFTER LIFE
2.COMING BACK-A Psychiatrist Explores Past Life Journeys
By DR.RAYMOND MOODY.
OR
MANY LIVES MANY MASTERS BY DR.BRIAN WEISS
No comments:
Post a Comment