பெப்ருவரி’ 1981 ல் பிரசுரமானது
என் வீட்டு சுவர்-
சித்தன்னவாசல் சுவர்கள் மட்டும்
என்ன தவம் செய்தன?
ஓவியங்களை சுமக்க
நாங்களோ இங்கு
நாளெல்லாம் வரட்டிகளய்
சுமக்கிறோம்.
***************
பெப்ருவரி’ 1981 ல் பிரசுரமானது
சிவனே
நந்தனை உள்ளே அழைக்காமல்
நந்தியை நகரச் சொன்ன
நீ தான் உண்மையிலே தீண்டத்தகாதவன்
மனதினால் கூட.
*****************************
ஏப்பிரல் 1981 ல் பிரசுரமானது.
இவ்வானத்திற்கு
இரண்டு பக்கமும்
அமாவாசை
பிறை நிலவும்,குறை நிலவும்
எனக்கினி வேண்டாமென
மாலைப் போதில்
காவி கட்டி
இரவெல்லாம்
இருள் சுமக்கும்
இவ்வானத்திற்கு
இரண்டு பக்கமும்
அமாவாசை
No comments:
Post a Comment